For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை சின்னம் யாருக்கு? கூட்டல் கழித்தல் கணக்குகளில் டெல்லி மேலிடம் படுபிஸியாம்!!

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைத்தால் தங்களுக்கு ஆதாயம் என்பதில் புதிய சர்வே எடுக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம் டெல்லி.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்துவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறது டெல்லி. இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் யாருக்கு எவ்வளவு சதவீத வாக்கு கிடைக்கும் என உளவுத்துறை மூலம் சர்வே எடுக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தொகுதிக்குள் ஆளும்கட்சியினர் நடத்திய பணம் பரிசுப் பொருள் விநியோகம் போன்றவற்றால் தேர்தலை ரத்து செய்தது ஆணையம்.

இதன்பிறகு, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அறிவித்துள்ளது ஆணையம். அதேநேரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை கிடைக்குமா என்பதைவிட, டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடக்குமா?' என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தினகரன் தரப்பு கோரிக்கை

தினகரன் தரப்பு கோரிக்கை

இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பிரமாண பத்திரங்களை ஆராய வேண்டும். போலியான பத்திரங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

தேர்தல் ஆணைய விசாரணையில் தினகரன் தரப்பினரின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. முதல்வர் பக்கம் அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களும் கட்சி நிர்வாகிகளும் இருக்கின்றனர். இதே காரணத்தை வைத்துத்தான் உ.பியில் அகிலேஷ் யாதவ் கைகளுக்குச் சைக்கிள் சின்னம் சென்றது. அதே பாணியில் எடப்பாடி பழனிசாமிக்குச் சின்னம் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

குழப்பத்தில் டெல்லி

குழப்பத்தில் டெல்லி

அப்படிக் கொடுக்கப்பட்டால் இதை எதிர்த்து தினகரன் தரப்பினர் நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, யாருக்கு இலையை வழங்குவது என்ற குழப்பம் டெல்லிக்கு ஏற்பட்டுள்ளது. இலை இல்லாமல் ஆர்.கே.நகரில் தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சி விரும்பவில்லையாம்.

ஆளும் தரப்பு நிலைமை

ஆளும் தரப்பு நிலைமை

கட்சி சின்னமும் தொண்டர்களும் எங்கு அதிகம் குவிந்து இருக்கிறார்களே அவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். தினகரன் பக்கம் பத்து சதவீத கட்சித் தொண்டர்களே உள்ளனர். இவர்களை வைத்துக் கொண்டு தேர்தலை எதிர் கொண்டால் தினகரனுக்கு 4 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஈபிஎஸ் பக்கம் இரட்டை இலை வந்தால், 70% வாக்குகள் கிடைக்கும் என்கிறது உளவுத்துறை. சின்னம் இல்லாமல் போட்டியிட்டால், ஆளும் தரப்புக்கு 10% வாக்கு கிடைக்கலாம் என்கிறது உளவுத்துறை. ஆர்.கே.நகரைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் தரப்பின் பக்கம் சின்னம் இருந்தால், அதிக எண்ணிக்கையிலான பா.ஜ.கவினர் உள்ளாட்சியில் இடம் பெறுவார்கள் எனவும் டெல்லியில் உள்ளவர்கள் கணக்கு போடுகின்றனர். இந்தக் கணக்குகளை முறியடிக்கும் வகையில் சட்டரீதியாக ஆலோசனை நடத்தி வருகிறார் தினகரன்.

English summary
According to the sources Delhi ordered to take a survey on the strength of Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X