For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மாதத்திலேயே ரூ380 கோடி கல்லா கட்டியது எங்களுக்கு தெரியும்.. எடப்பாடியிடம் எகிறிய டெல்லி போன்!

தமிழக அரசை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் டெல்லி மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாகவே இருந்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: "நீங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்... 2 மாதங்களில் ரூ380 கோடி பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று டெல்லியில் இருந்து வந்த போன்கால் தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, தினகரனை ஒதுக்கி வைப்பது நடவடிக்கைகளால் பாஜக இனி தலையிடாது என நினைத்துக் கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் டெல்லியில் முகாமிட்டிருந்த டிடிவி தினகரனுடன் தயக்கமே இல்லாமல் போனில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Delhi warns CM Edappadi Palanisamy?

தினகரனுடனான செல்போன் பேச்சு முடிந்த நிலையில் டெல்லியில் இருந்து மீண்டும் ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் பேசிய மூத்த அதிகாரி, இனி உங்களுக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைன்னு நினைச்சு ஹாயாக இருக்காதீங்க...

24 மணிநேரமும் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறோம்.. 2 மாதங்களில் நீங்க முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தது முதல் இதுவரை ரூ380 கோடி பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது.. அத்தனைக்கும் ஆதாரங்களும் இருக்கு.. அதனால கவனமாக இருங்க என கூறியிருக்கிறார்.

புள்ளி விவரத்துடன் ரூ380 கோடி பணப் பரிமாற்றத்தை டெல்லி அதிகாரி சொல்ல சொல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே அதிர்ந்து போனாராம். தமிழக அமைச்சர்களுக்கும் இத்தகவல் பாஸ் செய்யப்பட்ட அனைவருமே பீதியில் உறைந்து போயுள்ளார்களாம்.

English summary
Tamilnadu Officials said that Delhi Senior officials warned to Chief Minister Edappadi Palanisamy on Dinakaran issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X