For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வியாபாரி குடும்பமே கொலைக்கு காரணமே ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புதான்- திடுக் தகவல்

சென்னை பல்லாவரம் அருகே துணி வியாபாரி குடும்பத்தினரை வெட்டிக்கொன்று தற்கொலை செய்துகொண்டதற்கான திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை பல்லாவரத்திரல் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை..வீடியோ

    சென்னை: பல்லாவரம் அருகே துணி வியாபாரி குடும்பத்தினரை வெட்டிக்கொன்று தற்கொலை செய்துகொண்டதற்கான திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    தாமோதரன் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது உறவினருக்கு போன் செய்த தாமோதரன் தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவத்துள்ளார்.

    ரத்தவெள்ளத்தில் குடும்பத்தினர்

    ரத்தவெள்ளத்தில் குடும்பத்தினர்

    இதையடுத்து உறவினர் பதறியடித்துக்கொண்டு வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் தாமோதரனின் இரண்டு குழந்தைகள் அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    உடல்களை கைப்பற்றிய போலீஸ்

    உடல்களை கைப்பற்றிய போலீஸ்

    தாமோதரனும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    5 பக்க கடிதம்

    5 பக்க கடிதம்

    ஆனால் சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் தாமோதரன் எழுதி வைத்த 5 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை

    அதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ரூ500, ரூ1,000 செல்லாது நடவடிக்கையால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குடும்பத்தினரை கொன்று..

    குடும்பத்தினரை கொன்று..

    மேலும் ஜிஎஸ்டியும் தொழிலில் நஷ்டம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்ததாக அந்த கடிதத்தில் தமோதரன் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தினரை கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தாமோதரனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    5 பேர் பலி - அதிர்ச்சி

    5 பேர் பலி - அதிர்ச்சி

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்த துணிக்கடை வியாபாரி குடும்பத்தினரை கொன்று தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A textiles owner killed his 2 children, mother and wife near in Chennai Pallavaram. The textiles owner Dhamotharan also commit suicide attempt. He also died in the hospital. he has writen a suicide note that he got loss in business by Demonetization.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X