For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலக் கொடுமை… ஏடிஎம்மில் பணம் எடுக்க வேலைக்கு ஆள் தேவையாம்… திருச்சியில் விளம்பரப் பலகை

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்க வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் திருச்சியில் வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடந்து வரும் துயரங்கள் சொல்லி மாளாதவை. பண மதிப்பு நீக்கம் கடந்த மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்து போய் கொண்டிருக்கிறது. இன்னமும், வங்கியின் வாசலிலும், ஏடிஎம் மையத்தின் வாசலிலும் மக்கள் கூட்டம் அலை மோதியே படியே உள்ளது.

Demonetization: Salary for taking money from ATM

ஏடிஎம்மில் நீண்ட நேரம் வரிசையில் நின்று பணம் கிடைத்து விடும் என்றால் கூட பரவாயில்லை. பணம் எடுக்க அருகில் சென்ற நிலையில், ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லை என்று கைவிரித்துவிட பணத்தை எடுக்க முடியாத பொதுமக்கள், அடுத்த ஏடிஎம் மையம் நோக்கி ஓடுகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்தப் பணத்தை எடுக்கவே பல மணி நேரம் வரிசையில் நிற்கின்றனர். பலர் தெருத் தெருவாக அலைந்து திரிந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் நேரம் விரயம் அதிகம் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்வோரால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டு வேலை கெட்டுவிடுகிறது. 2000 ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க ஒரு நாள் வீணாகிவிடுகிறது. இதனால் மக்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடை ஒன்றில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்கு காமிடியாக தோன்றினாலும், பாஜக ஆளும் இந்தியாவில் இதுதான் உண்மை நிலைமை என்கிறார்கள் பொதுமக்கள்.

English summary
Vacancy board has been put in a shop for staff requirement to take money from ATM at Chatram bus stop in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X