For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுக்குமேல ஏதும் 'எக்ஸ்டென்சன்' அறிவிப்பு வருமா? காத்திருக்கும் 500, 1000 நோட்டுகள்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சுங்கச் சாவடி கட்டண ரத்துக்கு எக்ஸ்டென்சன் கொடுத்த மாதிரி, வேறு அத்தியாவசிய கட்டண செலுத்துமிடங்களில் 500, 1000 நோட்டுகளை செலாவணியாக்க கால நீட்டிப்பு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.

நவம்பர் 8-ம் தேதியிலிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன.

Demonitisation: People expecting few more extensions

ஆனாலும் பெட்ரோல் நிலையங்கள், மின் கட்டணம் செலுத்துமிடங்கள், அரசு வரி செலுத்துமிடங்களில் இந்த நோட்டுகளை வாங்க இன்று (நவம்பர் 24) வரை அவகாசம் அளித்திருந்தது அரசு.

இன்றுடன் அந்த அவகாசம் முடிகிறது. இந்த நேரத்தில், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலிப்பை வரும் டிசம்பர் 31 வரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

இதே போன்ற கால நீட்டிப்பு மற்ற அத்தியாவசிய சேவை வரி செலுத்துமிடங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலும் அறிவிக்கப்படுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள், இன்னும் மாற்ற முடியாத சில 500, 1000 நோட்டுகளை வைத்திருக்கும் மக்கள்.

English summary
Public who still having few 500, 1000 denominations in hands are expecting new extensions for paying taxes and buy fuels with old currency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X