For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது... மத்திய இணை அமைச்சர் அஷ்வினிகுமார்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Dengue fever is in control, says Central Minister

எனினும் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டெங்குவுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர். இதுவரை டெங்கு பாதித்த 12,000 பேருக்கு அரசு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மத்திய குழு வந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் இன்று ஆய்வு நடத்தினார்.

Dengue fever is in control, says Central Minister

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி குமார், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய குழு இன்று புதுச்சேரியில் ஆய்வு நடத்துகிறது. தமிழக அரசிடம் ஆலோசித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர் என்றார்.

English summary
Central Minister Ashwin kumar reviews in Chennai Rajiv Gandhi Hospital and he also says that the central medical team will goto Pondicherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X