For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூகத்திற்கு பயன்படக் கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு அறிவுரை

Google Oneindia Tamil News

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கவிதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மாணவர்களிடம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.

கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர் ஜீவா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது, நமது வாழ்க்கை சமூகத்திற்கு பயன்படக் கூடிய வகையில் இலட்சியத்தோடு இலக்கை நோக்கி குறிக்கோள் கொண்டு செல்ல கூடியதாக இருக்க வேண்டும்.

மணி அடிப்பதற்காக பள்ளிக்கு செல்லக் கூடாது. மணி அடிப்பது திட்டத்திற்கான நேர செய்லபாடு. அவ்வாறு இயங்க கூடாது. நம்முடைய இயக்கமானது தடையில்லாத இயக்கமாக இருக்க வேண்டும். திருவள்ளுவர், பாரதியார், காந்தி போன்றோர் தங்களுக்கு என்று முத்திரை பதித்தனர். அது போல் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் முத்திரை பதிக்க இலக்கை வகுத்து கொள்ள வேண்டும்.

தாய் தந்தையைப் பேணுங்கள்

தாய் தந்தையைப் பேணுங்கள்

கலாம் வாழ்க்கையின் மூலமாக பல நல்ல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பாரதியார் காலையில் எழுந்து படிக்கலாம் என பாடியுளார். அதற்கு காரணம் அதி காலையில் நமது மனது அறிவியல் ரீதியாக மிகவும் துரிதமாக செயல்படும். அந்த நேரத்தில் நாம் படித்தால் நமது மனதில் அனைத்து விஷயங்களும் நன்றாக நிற்கும். முதியோர் இல்லங்களுக்கு எந்த காலத்திலும் பெற்றோர்களை நன்கொடையாக கொடுக்காதீர்கள்! எதை வேண்டுமானாலும் நன்கொடையாக கொடுங்கள். ஆனால் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாதீர்கள்.பெற்ற தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என்றார். கவிதை சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முத்தையன், ஆகாஷ்குமார், அம்மு ஸ்ரீ, ஜனஸ்ரீ, கிருத்திகா, மாதரசி, ராஜேஷ், பார்கவி லலிதா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக மாணவர் விஜய் நன்றி கூறினார்.

நடமாடும் அறிவியில் வாகனம்

நடமாடும் அறிவியில் வாகனம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

அறிவியல் சார்ந்த விளக்கங்கள்

அறிவியல் சார்ந்த விளக்கங்கள்

அகஸ்தியா அறக்கட்டளை மற்றும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த அறிவியல் வாகனம் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனை மூலம் சென்னையை சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டல காற்று,காற்றின் அழுத்தம்,காற்றின் சமநிலை அறியும் சோதனை ஆகியனவற்றை சிறிய பிளாஸ்டிக் பந்து,சிறிய பிளாஸ்டிக் குழல் கொண்டு செய்து காண்பித்தார். வெற்றிடம் எப்படி ஏற்படுகிறது? சூறாவளி சுழலும் காற்று எப்படி உருவாகிறது? என்பது பற்றியும் குறைந்த காற்றழுத்தம்,உயர்ந்த காற்றழுத்தம் ஆகியன கொண்டும் விளக்கினார்.

நீர் தெளிப்பான் சோதனை

நீர் தெளிப்பான் சோதனை

காற்றழுத்த குழாய் கொண்டு நீருக்குள் செங்கோண வடிவில் குழல் வைத்தும், வெற்றிட குழாயுக்குள் வரும் காற்றை ஊதவைத்து ,குடுவையில் நீர் காற்றுழுத்ததால் தெறிக்க செய்து நீர் தெளிப்பான் சோதனை செய்து காண்பித்தார். இது பம்பு செட், பூச்சிக்கொல்லி மருந்தடிக்கும் கருவி, சென்ட் குடுவை ஆகிவற்றில் இம்முறை பயன்படுத்தபடுகிறது என விளக்கினார். காற்றழுத்த கருவி மின் விசை கொண்டு பந்து உயரே சுழலும் சோதனை செய்து காண்பித்தார்.பருப்பொருள் ஒவ்வொன்றின் நிறை, பண்புகள், பாயும் தன்மை, இயற்பியல் மாற்றம், வேதியியல் மாற்றம் ஆகியன செய்து காண்பித்தார். மாணவர்கள் ஜெகதீஸ்வரன், விஜய், பரத், தனலெட்சுமி, ராஜேஸ்வரி, சின்னம்மாள், காவியா உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

English summary
Devakottai DEO advised the school students to work hard to the benefit of the society they belonged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X