For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரிய கோயிலில் தரையில் பெயர்த்தெடுத்த கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு

தஞ்சை பெரிய கோயிலில் பழைய கற்களை அடுக்கி வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக பெயர்த்தெடுத்த பழைய கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து 'தஞ்சை பெரிய கோவில் ஆகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

Devotees worship the old stones in Tanjore Big Temple

இந்த கோயிலுக்கு வரும் வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இதற்காக கோயிலின் சுற்று பிரகார தரைகளில் புதிய கற்களை பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில தினங்களாக நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பிரகாரத்தின் தரையில் இருந்து பெயர்த்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இந்த நூதன வழிபாட்டை செய்ய துவங்கியுள்ளனர்.

வீடு கட்டுவது உள்ளிட்ட தங்களின் வெவ்வேறு பிரார்த்தனைகளை கோரிக்கைகளாக முன்வைத்து பக்தர்கள் இந்த வழிபாட்டில் இறங்கியுள்ளனர். ராஜராஜன் கட்டிய இந்த கோயிலின் கற்களை கொண்டு வழிபாடு செய்தால் தாங்களும் சொந்தமாக வீடு கட்டுவோம் என நம்பிக்கையில் இதனை செய்வதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Devotees worship the old stones at Tanjore Big Temple. The renovation work is underway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X