For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள்.. நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த்

குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என குற்றவாளி தஷ்வந்த் நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுமி ஹாசினி கொலை வழக்கு...தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு- வீடியோ

    செங்கல்பட்டு: குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என குற்றவாளி தஷ்வந்த் நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார்.

    சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரான தஷ்வந்த் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமியை வெளியே விட்டால் உண்மையை கூறிவிடுவாள் என எண்ணி குழந்தையை கொன்றுள்ளான். பின்னர் குழந்தையை பெரிய பையில் எடுத்து சென்ற தஷ்வந்த் யாருக்கும் தெரியாமல் குழந்தையை எரித்துள்ளான்.

    கைது செய்த போலீஸ்

    கைது செய்த போலீஸ்

    இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.

    புழல் சிறையில் அடைப்பு

    புழல் சிறையில் அடைப்பு

    ஜாமீனில் வந்த அவர் தாயை கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்றார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    தஷ்வந்த் குற்றவாளி

    தஷ்வந்த் குற்றவாளி

    இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தஷ்வந்த் குற்றவாளி என நீதிபதி வேல்முருகன் உறுதி செய்தார்.

    வாடிப்போன முகம்

    வாடிப்போன முகம்

    நீதிபதி தீர்ப்பை வாசிக்க வாசிக்க தஷ்வந்தின் முகம் வாடிப்போனதாகவும் உடல் சோர்ந்து காணப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் தரப்பு வழக்கறிஞர் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த்

    நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த்

    அப்போது தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தஷ்வந்த் நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார். முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சட்டபுத்தகங்களை தஷ்வந்த் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The convict Dhaswand pleaded to the judge to give him a minimum penalty for hasini rape and murder case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X