For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோ-ஆப்டெக்ஸ் சார்பில் வேட்டி தினம்... சப் கலெக்டர் தலைமையில் வேட்டி அணிந்து உறுதிமொழி

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: கோவில்பட்டி சப்கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கோ-ஆப்டெக்ஸ் சார்பில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செண்பககனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Dhoti day celebrated in Kovilpatti

கோவில்பட்டி கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் ரத்தினராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி சப்கலெக்டர் டாக்டர் விஜயகார்த்தகேயன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக மக்களின் வேட்டி எனும் அழகான ஆடையில் மரபை போற்றி வசப்படுத்திடவும், மண்ணின் மனத்தை அதன் மருத்துவ மகத்துவத்தை அனைவருக்கும் தெரியபடுத்தவேண்டும் என பேசினார்.

பின்னர் அவரது தலைமையில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி அணிந்து வேட்டி தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழிதடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரியகத்தின் நளினத்தை வெளிப்படுதிதிய தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. அத்தகைய தமிழக மக்களின் வேட்டி என்கிற அழகான ஆடையின் மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும், மண்ணின் மனத்தை மாண்புற மலரச் செய்திடவும் இந்த நாளில் நாம் அனைவரும் வேட்டி அணிந்து அதன் மருத்துவ மகத்துவத்தை உணர்ந்து ஆரோக்கியமான ஆடை அணிவதன் மகத்துவத்துவத்தை உலகெங்கும் பரவும் வகையில் எடுத்துச் சொல்வேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதி மொழி எடுத்தனர்.

Dhoti day celebrated in Kovilpatti

எட்டயபுரம் திருப்பதி கேஸ் ஏஜென்ஸி சார்பில் கிராமப்புற நலிவுற்றோர் 30 நபர்களுக்கு வேட்டி வழங்கப்பட்டது. பின்பு விழாவில உரிமையாளர் சீனிவாசன், வட்டாரவளர்ச்சி அலுவலர் செல்வராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், வீராச்சாமி, ஜெயப்பிரகாஷ், நாராயணசாமி, சீனியர் சேம்பர், மண்டல துணைதலைவர் ராஜ்குமார், சீனியர் சேம்பர் நிர்வாகிகள் அருண், ரத்தினகுமார், நூலகர் ப+ல்பாண்டி, புதுவாழ்வு திட்ட மேலாளர் தரணி, பிரபு, இலக்கிய உலா ரவீந்தர், தலைமையாசிரியர்கள் கென்னடி செல்வராஜ், சப்கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜி உட்பட 100க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

English summary
Dhoti day was celebrated in Kovilpatti. More than hundred persons attended the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X