For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் உளவு பார்க்க வந்ததா... ?

Google Oneindia Tamil News

US Ship
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்காகப்பல் உளவு பார்க்க வந்ததா.. என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

துத்துக்குடி துறைமுகத்தில்இருந்து சுமார் 20கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைப் பகுதியில் ஒரு கப்பல் நிற்பதாக இந்திய கப்பற்படைஅதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று கப்பலை சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர். பின்னர் கப்பல் மாலுமிகளிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் இந்தகப்பல் அமெரிக்கா நாட்டை சார்ந்தது என்பதும்,அட்வான் போர்ட் ஒகியே என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சீமோன் கார்டு என்ற அந்தகப்பலில் 10மாலுமிகள்,25 பாதுக்காப்பாளர்கள் இருந்தனர். இதில்

அமெரிக்க.உக்ரைன்,நாடுகளை சார்ந்தவர்களும், இந்தியாவை சார்ந்தவர்களும்,தமிழகத்தை சார்ந்த 2பேரும் அடங்குவார்கள்.

மாலுமிகளிடம் நடத்திய விசாரணையில் உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் கப்பலில் இருந்து துப்பாக்கிகள் ,தோட்டாக்கள்,வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாயின.மேலும் கப்பலில்இருந்தவர்கள் மீது 4 பிரிவுகளில் தருவாய் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தூதரக அனுமதிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையம்,அணு ஆராய்ச்சிமையம்,உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருப்பதால் இந்தகப்பல் உளவு பர்ர்க்க வந்ததா...இல்லை வேறு ஏதேனும் சதிதிட்டம் நடத்த வந்ததா ..இப்படி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப் பட்டுவருகிறது.

இந்நிலையில் கப்பல் நிறுவனத்தினர் கூறுகையில், பாய்லின் புயல் காரணமாகவே பாதை மாறி வந்ததாக கூறியுள்ளனர். மேலும் தாங்கள்ஆயுதங்களை கடத்தி வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

கப்பல் நிறுவனத்தின் சார்பில் போதிய தகவகள் இல்லாததால் மாலுமிகள், கப்பலில் உள்ள பாதுகாப்பு படைஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
Police and other security agencies are probing wheter the US ship, captured near Tuticorin came for spying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X