For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் ஜீன்ஸ் போட்டால் பூகம்பம்... போகிமான்... வால்டிஸ்னி சாத்தான்கள் - அதிரடி ஃபத்வா

நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் பல்வேறு விதமான சில விஷயங்களுக்கு எதிராக ஃபத்வாக்கள் கொடுக்கப்படுகின்றன, அவற்றின் சுவாரஸ்ய தொகுப்பு

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தொடங்கி, போகிமான் மற்றும் வால்டிஸ்னி தயாரிப்புகள் வரை அண்மைக் காலமாக பல்வேறு ஃபத்வாக்கள் கொடுக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களில் சில சுவாரஸ்யமான ஃபத்வாக்களை இங்கே பார்க்கலாம்.

இஸ்லாம் மதத்தில் ஃபத்வா என்பது தண்டனையாக அறிவிக்கப்படுவது, எப்போதாவது இது அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் ஃபத்வா கொடுப்பது இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

அண்மைக் காலமாக பல்வேறு ஃபத்வாக்கள் கொடுக்கப்படுகின்றன. வார விடுமுறையில் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சில நகைச்சுவையான விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பெண்கள் ஜீன்ஸ்

பெண்கள் ஜீன்ஸ்

ஓராண்டுக்கு முன்னர் மௌலானா ஜூன்ஸ்க்கு ஃபத்வா கொடுத்தார். அதாவது பெண்கள் ஜூன்ஸ் அணிவதால் தான் பூகம்பம் ஏற்படுவதாகக் கூறி அதற்கு ஃபத்வா கொடுத்தார். வெள்ளிக்கிழமை தொழுகையையடுத்து ஜமியத் உலமே - ஈ-இஸலாமி பசல் தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் இந்த ஃபத்வாவை கொடுத்தார். பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஜூன்ஸ் அணியும் பெண்களுக்கு எதிராக ராணுவ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றார்.

அங்க போய் பேசாதீங்க

அங்க போய் பேசாதீங்க

இயற்கை உபாதைகளை கழிக்கும் போது பேசக் கூடாது, அவ்வாறு செய்தால் துஷ்ட சக்திகள் உங்களை வந்து சேரும் என்பதும் இதில் ஒன்றாம். ஃபத்வா துறையின் ஆராய்ச்சி கமிட்டி என்ன சொல்கிறதென்றால், தேவைப்பட்டால் ஒழிய இது போன்ற நேரங்களில் நீங்கள் ‘அங்கு இருக்கும் போது' பேசவே கூடாது. தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் கேட்கலாம் மற்றபடி பேசாதீர்கள் என்கிறார்கள், இது என்ன புதுசா இருக்கு.

ஆசைக்கு இணங்கனும்

ஆசைக்கு இணங்கனும்

ஒட்டக்கத்தின் மீதேறி சவாரி செய்தாலும் கணவனின் ஆசைக்கு மனைவி இணங்க வேண்டும் என்கிறது பேரக் முஃப்தி தன் ஸ்ரீ ஹருஷ்னியின் ஜகாரியாவின் ஃபத்வா. ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத காரணம், மாதவிடாய் அல்லது பிரசவித்திருந்தால் மட்டுமே உடலுறவை தவிர்க்க முடியும் என்கிறது அந்த ஃபத்வா.

ஆண்களுக்கு நோ ‘பட்டு’

ஆண்களுக்கு நோ ‘பட்டு’

ஷேக் சல்மான் அல் ஓதாவின் ஃபத்வா பட்டு ஆண்களுக்கு ஏற்றதல்ல என்கிறது. ஒரு முறை இறைதூதர் ஒரு கையில் பட்டு ஆடையையும் மற்றொரு கையில் தங்கத்தையும் வைத்துக்கொண்டு இது ஆண்களுக்கானதல்ல என்று கூறியுள்ளார். எனினும் பட்டை விரும்புபவர்கள் போர் சமயத்தில் மட்டும் அதனை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இது எதிரிகளுக்கு சமிக்ஞை செய்வதற்கான எச்சரிக்கை என்றும் அதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது.

பெண்கள் வெட்டக்கூடாது

பெண்கள் வெட்டக்கூடாது

எகிப்தய இணையதளம் ஒன்றில் ஒரு வித்தியாசமான ஃபத்வா பற்றி கூறக்கட்டுள்ளது. இந்த ஃபத்வாவை கொடுத்ததற்காக அந்த நபர் தன்னுடைய பெயரைக் கூட வெளியிடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி என்ன ஃபத்வா என்கிறீர்களா பெண்கள் வாழைப்பழம் அல்லது வெள்ளரிக்காயை தொடக் கூடாதாம். இருங்க இருங்க தொடத்தான் கூடாது ஆனால் உங்களுடைய கணவன், சகோதரன், தந்தை என யாராவது ஒரு ஆணை அழைத்து இவற்றை வெட்டித் தரச் சொல்லி சாப்பிடலாம் என்கிறது இந்த ஃபத்வா.

மிக்கி மவுஸ் ஒரு சாத்தான்

மிக்கி மவுஸ் ஒரு சாத்தான்

வால்ட் டிஸ்னி மிக்கியை உருவாக்கும் போது ஒருமுறை அல்ல பல முறை அவரது மூளையில் சாத்தான் வாகனம் ஓட்டியிருக்கும். உலகம் முழுவதும் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை பலரும் ரசித்துபார்க்கின்றனர். முகம்மது அல் முனாஜித் ஆனால் அதற்கு வியக்கவில்லை. சவுதியை சேர்ந்த இந்த மதகுரு லிட்டில் மவுஸ் ஒரு தீயசக்தி என்று கூறியுள்ளார். அதே போன்று மவுஸ் சாத்தானின் வாகனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போகிமான் தீயசக்தி

போகிமான் தீயசக்தி

போக்கிமானும் ஒரு தீய சக்திதானாம். இது ஒரு கோமாளித்தனமான, ஆபாசத்தின் உச்சம் என்று கூறுகின்றனர். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய சட்டத்தை வகுக்கும் உயர் கமிட்டி போக்கிமான் விளையாட்டிற்கு ஃபத்வா கொடுத்துள்ளது. போக்கிமானுக்கு ஃபத்வா கொடுத்தது பற்றி விளக்கம் அளிக்கும் மதகுருக்கள், இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை அழிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

English summary
Do check out the list of fatwas we have compiled for you- smile, laugh, you need it after a stressful week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X