For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: ராஜினாமா விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு?

அதிமுக எம்பிக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ராஜினாமா செய்யும் விவகாரத்தில் அதிமுக எம்பிக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி பிரச்சனைக்காக தற்கொலை செய்வோம் என ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. கொளுத்திப் போட்டது இப்போது பற்றி எரிகிறது. நவநீதகிருஷ்ணன் அரசுக்கு நெருக்கடிதரத்தான் அப்படி பேசினார் என கூறப்படுகிறது.

Differences of opinion with AIADMK MPs on Cauvery

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்லாகவே நவநீதகிருஷ்ணன் பேசினார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எம்.பிக்களிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. திருச்சி குமார் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவு எடுத்துள்ளனர்.

ஆனால் எஞ்சிய எம்.பி.க்களோ, ராஜினாமா செய்ய தேவை இல்லை என பேசி வருகின்றனர். எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கிறோம்; ஒரு கவுரவமாக காவிரிக்காக ராஜினாமா செய்கிறோம் என வெளிப்படையாகவும் அதிமுக எம்பிக்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.

அதிமுக தலைமை இப்படி ஒரு நாடகத்தை நடத்த கூடாது என விரும்புகிறது. இதனால்தான் ராஜினாமா முடிவெடுத்த எம்பிக்களிடம் கடுகடுப்பை காட்டியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் அதிமுக எம்.பி.க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

English summary
AIADMK sources said, Senior party MPS strongly protest the Five MPs resignation decision for cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X