For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் குருபூஜையில் திராணியை காட்ட கூட்டத்தை திரட்டும் தினகரன்... முறியடிப்பதில் அரசு மும்முரம்!

பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் திராணியைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் திராணியைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். இதை முறிடியக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளது தமிழக அரசு.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சி வரும் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும் எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. 13 கிலோ தங்கக் கவசமும் வங்கியில் இருக்கிறது. இதை வெளியில் கொண்டு வர அதிமுக பொருளாளரின் கையெழுத்து தேவைப்படுகிறது எனவும் கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார் கருணாஸ்.

தினகரனின் ஆட்திரட்டல்

தினகரனின் ஆட்திரட்டல்

இந்நிலையில் அரசுத் தரப்பை அதிர வைக்கும் வகையில் குருபூஜைக்கு ஆட்களைத் திரட்டும் பணிகளில் இருக்கிறார் தினகரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், முக்குலத்தோர் மக்கள் மத்தியில் அ.தி.மு.கவுக்குப் பெரும் செல்வாக்கு உண்டு. அதேநேரத்தில் தமக்கு எந்த ஜாதிய முத்திரையும் கூடாது என பசும்பொன்னில் 144 தடை உத்தரவையும் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதற்கு எழுந்த எதிர்ப்பை சமாளிக்கவே அமைச்சரவையில் கூடுதம் இடங்கள் அச்சமூகத்துக்கு அளிக்கப்பட்டன. இதனால் அவர்கள் சற்று ஆறுதல்லடைந்தனர்.

ஜெ அணிவித்த தங்க கவசம்

ஜெ அணிவித்த தங்க கவசம்

இதன்பிறகுதான் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என அறிவித்தார் ஜெயலலிதா என்றார். அண்மையில் மதுரை மேலூரிலும், திருச்சியிலும் தினகரனுக்காகக் கூட்டிய கூட்டத்திலும் அந்த சமுதாய மக்களே அதிகம் பங்கெடுத்தனர். இதே கூட்டத்தை தேவர் குருபூஜையிலும் திரட்ட வேண்டும் என்பது தினகரன் வியூகம்.

உளவுத்துறை வார்னிங்

உளவுத்துறை வார்னிங்

ஆனால் தினகரன் செல்வாக்கு எடுபட்டுவிடக் கூடாது என்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். அதேநேரத்தில் சென்சிட்டிவ்வான இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும் என உளவுத்துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு சிறிது தடம்புரண்டாலும் ஜாதி ரீதியான விவகாரமாக விஸ்வரூபமெடுக்க வைத்துவிடுவார்கள் என எச்சரித்திருக்கிறது உளவுத்துறை.

தினகரன் மீது சந்தேகம்

தினகரன் மீது சந்தேகம்

தினகரனுக்கு ஆதரவாக டெல்டா மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆட்களை திரட்டுவதில் முனைப்பு காட்டப்படுகிறதாம். ஆனால் தினகரன் இதை பயன்படுத்தி தனி ஆவர்த்தனம் வாசிப்பாரோ என்கிற தயக்கமும் டெல்டாவில் இருக்கிறதாம்.

English summary
Sources said that Dinakaran camp is gearing up for the upcoming Thevar Jayanthi on Oct. 30
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X