For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பா? திவாகரன், தினகரன் மாறுபட்ட கருத்து?

திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கல் கலந்துகொள்வார்கள் என்பதில் தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே மாறுபட்ட கருத்து உள்ளதாகத் தெரிகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளை திமுக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு குறித்து தினகரன் மற்றும் திவாகரன் இடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன் நீட் தேர்வு குறித்து திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்வார்கள் என கூறினார்.

Dinakaran and Divakaran have difference of opinion

அவருடைய கருத்து வெளிவந்தவுடன், கீரியும் பாம்புமாக இருந்த திமுகவும் அதிமுகவும் ஒன்று சேருகிறதா? என்றெல்லாம் வழக்கம் போல் நெட்டிசன்கள் கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். திவாகரனின் அறிவிப்பு அதிமுக தொண்டர்களிடையேயும் குஅப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரம்பலூரில் கட்சி நிர்வாகி குடும்பத்தின் திருமண விழாவில் கலந்துகொண்ட போது செய்தியாளர்கள் இதுகுறித்து தினகரனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த தினகரன், நாளை நடைபெறும் திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

தினகரனுக்கும் திவாகரணுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியாத நிலையில், இவர்கள் இருவருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பாக மாறுபட்ட கருத்து உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

English summary
Divakaran and Dinakaran have difference of opinion in Admk participation in DMK meeting on Neet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X