For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவை மீண்டும் சந்திக்கும் தினகரன்- தனிக்கட்சி பற்றி நாளை மறுநாள் அறிவிப்பு?

தனிக்கட்சி தொடங்குவது பற்றி தினகரன் நாளை மறுநாள் அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.

By Prabha
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க அனுமதி வாங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' இந்த சந்திப்பில், அரசியல்ரீதியாக எடுக்க வேண்டிய இறுதி முடிவுகள் பற்றி விவாதிக்க இருக்கிறார். அதில், புதிதாகத் தொடங்க இருக்கும் தனிக்கட்சி பற்றியும் சிலவற்றைத் தெளிவுபடுத்த இருக்கிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில், அடுத்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர திட்டமிட்டிருக்கிறார் தினகரன். இதற்கிடையில், வரும் 6-ம் தேதி சசிகலாவை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் தினகரன். இந்த சந்திப்புக்கு சிறைத்துறையில் இருந்து அனுமதியும் கிடைத்துவிட்டது.

கடந்த மாதம் 19-ம் தேதி சசிகலாவை சந்திக்க தினகரன் சென்றபோது, அவருடன் இளவரசி மகன் விவேக்கும் சென்றிருந்தார். இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் சமாதானப் பேச்சை நடத்தி முடித்திருக்கிறார் சசிகலா. விவேக்கும், ' அத்தானோடு எனக்கு எந்தவித சிக்கலும் இல்லை. அவருடைய முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறேன். என்னால் குடும்பத்துக்கு எந்தவிதக் கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது' எனப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெயா டி.வி நிர்வாகத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறார் விவேக்.

சசிகலாவின் அறிவுறுத்தல்

சசிகலாவின் அறிவுறுத்தல்

"குடும்ப மோதலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாலும், அரசியல்ரீதியாக எந்த ஓர் அசைவும் இல்லாமல் இருப்பது சசிகலாவுக்கு வேதனையை அளித்துள்ளது" என விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர், " கடந்தமுறை நடந்த சந்திப்பில், ' தீர்ப்பு வரும் வரையில் எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு அறிவித்துவிட வேண்டாம். இந்தமாத இறுதிக்குள் கட்டாயம் தீர்ப்பு வந்துவிடும். அதன்பிறகு, நம்மைத் தேடி அனைவரும் வருவார்கள்' என விளக்கினார் சசிகலா.

புதிய கட்சிகளால் ஆபத்து

புதிய கட்சிகளால் ஆபத்து

ஆனால் தினகரனோ, ' நம்மை நோக்கித்தான் தொண்டர்கள் வருவார்கள். அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம்தான் மக்கள் நம்மை நம்புகிறார்கள். மோடிக்கு எதிராகப் பேசுவதால்தான் கூட்டம் கூடுகிறது. சிறுபான்மையினரும் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையை நாம் ஆறப் போட்டுவிட்டால், அடுத்தடுத்து புதிய சக்திகள் முளைத்துவிடுவார்கள். மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். தனிக்கட்சியின் மூலம் ஆள்பவர்களையும் நம்பக்கம் கொண்டு வரலாம்' என விளக்கியும், சசிகலா தன்னுடைய வார்த்தையில் உறுதியாக இருந்துவிட்டார்.

வலுவாகும் எடப்பாடியார் கரங்கள்

வலுவாகும் எடப்பாடியார் கரங்கள்

இச்சந்திப்பு நிறைவடைந்து பத்து நாட்கள் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்காக, உயர் நீதிமன்றம் காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். வழக்கை தாமதிப்பதன் மூலம் எடப்பாடியின் கரங்கள் வலுப்பெறுவதை உணர்ந்திருக்கிறார் தினகரன். இந்த சந்திப்புக்குப் பிறகு, தனிக்கட்சி குறித்த உறுதியான முடிவை தினகரன் வெளியிட இருக்கிறார்" என்றார் விரிவாக.

சின்ன எம்ஜிஆர் பாஸ்கர்

சின்ன எம்ஜிஆர் பாஸ்கர்

ஜெயலலிதா இருந்தவரையில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிக் கட்சியாகப் புறப்படவே யோசித்தனர். 'சின்ன எம்.ஜி.ஆர்' என்ற பெயரில் அவ்வப்போது தலைகாட்டிய சுதாகரனும், ஒருகட்டத்தில் ஜெயலலிதா கோபத்துக்கு ஆளானார். ஆனால், கடந்த சில வாரங்களாக தினகரன் தம்பி பாஸ்கரனும் திவாகரன் மகன் ஜெயானந்தும் தனித்தனி அமைப்புகளை நடத்தி வருவதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். அதிலும், கடந்த மாதம், தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து பாஸ்கரன் நடத்திய பிரியாணி மேளாவை தினகரன் ரசிக்கவில்லை. 'போஸ் மக்கள் பணியகம்' என்ற பெயரில், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சமூக சேவைகளைச் செய்வது எனக் களம் இறங்கியிருக்கிறார் ஜெயானந்த். தனிக்கட்சி தொடங்கி தனக்கான செல்வாக்கை தினகரன் வளர்த்தெடுக்க முயற்சிப்பதுபோல, ஆளுக்கு ஆள் தனித்தனியாக இயங்குவதை தினகரன் விரும்பவில்லை. ' குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி மீடியாக்களை சந்தித்துப் பேசுவதால் குழப்பம் ஏற்படும். தனித்தனியாக செயல்படுவதால் குழப்பம்தான் ஏற்படும்' எனப் பேசி வருகிறார் தினகரன்.

தனிக்கட்சி பற்றி அறிவிப்பு?

தனிக்கட்சி பற்றி அறிவிப்பு?

இதைப் பற்றி சசிகலாவின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் குடும்பத்துக்கு வேண்டியவர்கள். ஆறாம் தேதி நடக்கும் சந்திப்புக்குப் பிறகு, அரசியல்ரீதியாக சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருக்கிறார் தினகரன். அதற்குள், அவரது தினகரன் ஆதரவாளர்களை முழுமையாக ஒடுக்கும் வேலைகளை முடக்கிவிட்டிருக்கிறது ஆளும்கட்சி.

English summary
Sources said that RK Nagar MLA Dinakaran will meet Sasikala at Bengaluru Jail on Feb 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X