சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் தினகரன்-வீடியோ

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம். நடராஜனை இன்று தினகரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜன், மனைவி சசிகலாவை பார்க்க விரும்புகிறார்; ஆனால் தினகரன்தான் நடராஜனை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வந்து பார்க்கவிடாமல் தடுக்கிறார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் குற்றம்சாட்டியிருந்தார்.

Dinakaran meets M Natarajan in Hospital

கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தால் சசிகலாவின் அரசியல் இமேஜ் பாதிக்கும் என தினகரன் கூறிவருவதாகவும் தீபக் குற்றம் சாட்டியிருந்தது சர்ச்சையானது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நடராஜனை தினகரன் நேரில் சந்தித்தார்.

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனிடம் உடல்நலம் குறித்தும் விசாரித்தார் தினகரன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran today met Sasikala's husband M Natarajan who was admitted in hospital on today.
Please Wait while comments are loading...