For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் அருகே, அமைச்சர் காமராஜ் - தினகரன் ஆதரவாளர்கள் மோதல்: சோடாபாட்டில், கற்கள் வீச்சு

கும்பகோணம் அருகே வலங்கைமானில் அமைச்சர் காமராஜ்-தினகரன் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வலங்கைமானில் அமைச்சர் காமராஜ்-தினகரன் ஆதரவாளர்கள் சோடாபாட்டில், கற்கள் வீசி மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக கட்சியில் ஆபரேசன் செய்வதாக கூறி, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் கட்சிப்பதவிகளை பறித்து அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

Dinakaran and Minister Kamaraj supporters Clash in Kumbakonam

இதற்கு தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உருவபொம்மைகளை எரித்து வருகின்றனர்.

அமைச்சர் காமராஜின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்களும் உருவபொம்மைகளை எரிக்கின்றனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கற்கள், சோடா பாட்டிலை வீசி தாக்கிக்கொண்டனர். மோதலில் பலர் காயமடைந்துள்ளனர் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
TTV Dinakaran and Minister Kamaraj supporters Clash at Valangaiman near Kumbakonam in Tanjavur district. Security Tightened in Kumbakonam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X