For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் அலுவலக எரிப்பு: எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கலாமா?- சிபிஐ பதிலளிக்க உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்காத எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப் பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் விசாரணையை இழுத்தடித்து வரும் எதிர் மனு தாரர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு மே 5-ம் தேதி தமிழகப் பத்திரிகை உலகச் சரித்திரத்தில் கறுப்பு நாள். 'தினகரன்' நாளிதழில் திமுகவில் யாருக்கு செல் வாக்கு அதிகம் என்பது தொடர் பான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டது. உச்சகட்டமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

Dinakaran office attack case: CBI draws flak in HC

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஊழியர்கள் வினோத், கோபி, பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். அன்றைய தி.மு.க. அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. 'அட்டாக்' பாண்டி உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது சி.பி.ஐ. அந்த வழக்கில் போலீஸ் சாட்சிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். கடந்த 09.12.09-ல் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

சீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடி மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்து, அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

அட்டாக் பாண்டி

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக வசதியாக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

சிபிஐ தயார்

பின்னர் இந்த வழக்கை நடத்த சிபிஐ தயாராக உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு தயாராக இருப்பதாக சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் பதிலளித்தார். இந்த வழக்கை சிபிஐ எப்படி நடத்தப்போகிறது, வழக்கின் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டனர். எந்த இடத்தில் இருந்து வழக்கைத் தொடங்கப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர்.

நிபுணர்கள் சான்று தேவை

அதற்கு, ‘நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் எதிரிகளுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க சிபிஐயிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன' என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். புகைப்படங்கள், வீடியோக்களை எப்படி ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியும் என்று கேட்ட நீதிபதிகள், முன்பு புகைப்படத்தின் நெகட்டிவ் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப் பட்டது. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி டிஜிட் டல் உலகில் புகைப்பட நெகட்டிவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

அட்டாக் பாண்டிக்கு கெடு

தகவல் உரிமைச் சட்டப் படி சாட்சியங்களை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதில் சரியான புரிதல் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஜனவரி12ம் தேதிக்குள் சொந்தமாக வழக்கறிஞரை வைத்துக்கொள்ள வேண்டும் என அட்டாக் பாண்டிக்கு நீதிபதிகள் கெடுவிதித்து ஒத்திவைத்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அட்டாக் பாண்டி வழக்கறிஞர்

அப்போது அட்டாக் பாண்டி தரப்பில் வழக்கறிஞர்.வெங்கடேஸ்வரன் வாதிடும்போது ‘சிபிஐ மேல்முறையீட்டு மனுவில் மட்டும் அட்டாக் பாண்டி தரப்பில் தான் ஆஜராவதாகவும், பூங்கொடி யின் சீராய்வு மனுவில் அட்டாக் பாண்டி தரப்பில் வாதிடுமாறு தான் கேட்டுக்கொள்ளப்படவில்லை' என்றும் கூறினார்.

ஜனவரி 18க்கு ஒத்திவைப்பு

நீதிபதிகள் தங்கள் பதிலில் ‘நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்காத எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் விசாரணையை இழுத்தடித்து வரும் எதிர் மனு தாரர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்றனர். இதையடுத்து இந்த வழக்கு ஜனவரி18க்கு ஒத்திவைக் கப்படுகிறது. அன்று எதிரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்படுமா? இல்லையா? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும்' என கூறினர்.

English summary
The Madras High Court Bench here on Tuesday criticised the Central Bureau of Investigation (CBI) for not taking effective steps in the last five years to proceed with an appeal preferred by it against the acquittal of all 17 accused, including V.P. Pandi alias ‘Attack’ Pandi, from the 2007 Dinakaran newspaper office attack case in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X