For Daily Alerts
Just In
தாய்மாமன் மகன் மகாதேவன் உடலுக்கு தினகரன் நேரில் அஞ்சலி
தஞ்சாவூர்: சசிகலாவின் அண்ணன் மகன் டிவி மகாதேவன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47). தஞ்சையில் வசித்து வந்தார். நேற்று, திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக மகாதேவன் சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோரும் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தினகரனுக்கு மகாதேவன், தாய்மாமா மகன் ஆவார். மகாதேவன் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.