சென்னையில் சபாநாயகருடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலுவை டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ திடீரென சந்தித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை அண்மையில் திரும்பப்பெற்றனர். இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து அவர்கள் கடிதம் அளித்தனர்.

Dinakaran support MLA Vettrivel meets Speaker Dhanapal in the assembly

இதைத்தொடர்ந்து ஆதரவை திரும்பப்பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகரின் நோட்டிஸ் குறித்து எம்எல்ஏக்கள் நாளை விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran support MLA Vettrivel meets Speaker Dhanapal in the assembly. Dinakaran support MLAs have to give explanation about the withdrawal of CM support.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற