For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்குள் வந்ததும் கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்!

தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தனி உறுப்பினராக அமர்ந்த இருக்கையில் தற்போது தினகரன் அமர்ந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்!- வீடியோ

    சென்னை: தினகரனே தன்னுடைய இருக்கை விவகாரம் இவ்வளவு வைரல் ஆகி இருக்கும் என்று நினைத்து இருக்க மாட்டார். அந்த அளவிற்கு தினகரன் இருக்கை எது என்று பலரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

    ஆளுநர் உரையை விட இந்த 'சுயேட்சை' வேட்பாளரின் இருக்கை குறித்த தேடல்தான் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அவர் சட்டசபையில் தனியாக பின்பக்கம் உட்கார வைக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஆனால் அவர் உட்கார்ந்த 148வது இருக்கையில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இன்னும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சட்டசபையில் என்னவெல்லாம் நடக்குமோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    கெத்து தினகரன்

    கெத்து தினகரன்

    தினகரன் காலையில் சட்டசபைக்கு தனியாகத்தான் வந்தார். அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பலமான வரவேற்பு அளித்தார்கள். இதை தினகரனே எதிர்பார்த்து இருப்பாரா என்று தெரியவில்லை. அவரது இருக்கை எண் 148 வரை வந்து இவர்கள் விட்டு சென்றார்கள்.

    மாடர்ன்

    மாடர்ன்

    தமிழக அரசியல் வரலாற்றில் பலராலும் கவனிக்கப்படும் ஒருவர் வேட்டி சட்டை இல்லாமல் வந்தது இதுவே முதல்முறை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினி வேட்டி சட்டையுடன் போட்டோ போட்டுவிட்டார். ஆனால் இவர் வித்தியாசமாக பேண்ட் சட்டையில் இருந்தார்.

    கேப்டனின் இருக்கை

    கேப்டனின் இருக்கை

    சட்டசபையில் தினகரனுக்கு இருக்கை எண் 148 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் அமர்ந்த இருக்கை 148ம் இருக்கைதான். தினகரன் இந்த இருக்கையில் தனியாக இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது.

    இனிதான்

    இனிதான்

    இன்று முழுக்க அவர் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் சட்டமன்ற நிகழ்வுகள் கேள்வி நேரம் போன்றவை இனிதான் நடக்க இருக்கிறது. அதில் தினகரன் எம்.எல்.ஏ எப்படியெல்லாம் செயலாற்றுகிறார் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே அவரிடம் விவாதம் செய்ய கூடாது என அதிமுக உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    First Session of the Tamil Nadu Legislative Assembly starts today. Governor Panwari Lal Purohit inaugurates the assembly. Dinakaran participated in First Session of the TN Legislative Assembly. He got the seat number 148.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X