For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாரூரில் 428 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- வாணிபக்கழகம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூரில் 428 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘'திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் 300 மூட்டைகள் வைத்து இருந்தால் அவர்களது சிரமத்தை குறைக்க நடமாடும் கொள்முதல் நிலையங்கள் நேரடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அந்த இடத்திலேயே பணம் பட்டுவாடா செய்யப்படும்.

Dirct paddy procurement centers in Tiruvarur

விவசாயிகள் அந்த அந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொடுத்து அதற்கு உண்டான பணத்தை உடனே வழங்குகிறோம்.

மேலும் இ.சி.எல் என்ற முறையில் வங்கிகளின் மூலமாக கணக்கில் வரவு வைத்து வழிவகை செய்கிறது. இதுவரை 428 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப திறக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 28,299 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இடைதரகர்கள் நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட மாட்டாது. தனியார் வியாபாரிகள் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை. அது எந்தவிதத்திலும் எங்களை கட்டுப்படுத்தாது. விவசாயிகளுக்கு தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்''என்று கூறினார்.

English summary
Direct Paddy procurement centers will build in Tirupur, Tamil Nadu consumer center manager says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X