For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது மக்களாட்சியா இல்லை, வெள்ளைக்காரன் ஆட்சியா.. பாரதிராஜா ஆவேசம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதி ராஜா, தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதி ராஜா, தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி நடத்தினர். ஆட்சியர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பாரதி ராஜா கண்டனம்

பாரதி ராஜா கண்டனம்

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜாவும் இந்த அரக்க சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,

ஜாலியன் வாலாபாக்

ஜாலியன் வாலாபாக்

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு தூத்துக்குடியில் இதுபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

ஆட்சியரை சந்தித்திருந்தால்

ஆட்சியரை சந்தித்திருந்தால்

மக்களை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைத்திருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது. இவ்வாறு இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

வன்மையாக கண்டிக்கிறோம்

வன்மையாக கண்டிக்கிறோம்

இதனிடையே தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Director Bharatiraja condemns for the fire in Thoothukudi. Bharathiraja asking which govt is runnin in Tamilnadu? people govt or British govt?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X