For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒட்டுமொத்த ஈழத் தமிழரை நான் குற்றம் சொன்னேன் என்பது தவறு: இயக்குநர் சேரன் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஒட்டுமொத்த ஈழத் தமிழரை நான் குற்றம்சாட்டினேன் என்பது தவறு... நான் யாரைப் பற்றி பேசினேன் என்பது என்னை தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னா பின்னா திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்கள்தான் திருட்டு டிவிடியை வெளியிடுகிறார்கள்; அவர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவறுப்பாக இருக்கிறது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

சேரனின் பேச்சுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Director Cheran explains on Eelam Tamils remark

இந்த நிலையில் இன்று யக்குநர் சேரன் வெளியிட்ட விளக்க அறிக்கை:

என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்... என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது....

இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது... ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை..

அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா... உலகெங்கும் நண்பர்களை கொண்டு(அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்...

ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு...

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்..

அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்...

இவ்வாறு சேரன் தம்முடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Film Director explain his remarks on Eelam Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X