For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிக் கல்வித் துறை அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது

பள்ளிக் கல்வித் துறை அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக் கல்வி துறையின் அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது.

சென்னையில் தனியார் பள்ளியை சேர்ந்த 19 பேர் மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு நீர் நிலையில் மூழ்கி 3 மாணவர்கள் பலியாகினர்.

Director of Matric Schools orders not to take students for tour

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் பள்ளிக் கல்வி துறையின் உரிய அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

சுற்றுலா செல்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்னதாகவே அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறும் மாணவ, மாணவிகளை மருத்துவரின் அனுமதியின்றி அழைத்து செல்லக் கூடாது. சுற்றுலாவின் நோக்கம் கல்வி சார்புடையதாக இருக்க வேண்டும்.

சுற்றுலா செல்வதால் கற்றல், கற்பித்தல் பணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. பெற்றோர்கள், மாணவர்களை கண்டிப்பாக சுற்றுலா வர வேண்டும் என நிர்பந்திக்க கூடாது. அனுமதியின்றி சுற்றுலா அழைத்து சென்றால் பள்ளி முதல்வர், பள்ளி தாளாளரே பொறுப்பு

மலையேற்றம் இருந்தால் வனத்துறை அனுமதி வழிகாட்டுதலுடன் செல்ல வேண்டும். 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராக செல்ல வேண்டும். சுற்றுலா லாப நோக்கத்துடன் இருக்க கூடாது

ஆறு, குளம், அருவி, கடல் போன்ற நீர் நிலைகள் பகுதிகளுக்கு அழைத்து செல்ல கூடாது. சுற்றுலா செல்வதற்கு 2 மாதம் முன்னரே திட்டமிட வேண்டும். 4 நாட்களுக்கு மேல் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக் கூடாது என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.

English summary
No School student should be taken to tourism without prior permission of School Education Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X