For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க மாட்ட பாத்துக்க எங்களுக்கு தெரியாதா, நடுவுல நீங்க யாரு?.. பீட்டாவுக்கு பாண்டிராஜ் சவுக்கடி

ரேக்லா காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக இயக்குனர் பாண்டிராஜ் பீட்டா அமைப்பை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், படத்தில் ரேக்லா காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக பீட்டா அமைப்பை கடுமையாக சாடினார்.

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில், விவசாயத்தின் மேன்மையை பற்றி பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

படத்தில் நாயகன் கார்த்தி அறிமுகமாகும் ரேக்லா பந்தய காட்சிக்கு பீட்டா சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதுடன், ரிலீசும் பாதிக்கப்பட்டது. ஒரு வழியாக சில வெட்டுகளுக்கு பிறகு படத்திற்கு யு சான்று வழங்கப்பட்டது.

கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழா:

கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழா:

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று வெற்றி விழா நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கோபம்:

கோபம்:

விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, பீட்டா அமைப்பையும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர், ஹீரோ கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தில் என்னுடன் பணியாற்றிய எனது உதவி இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ரேக்லா போட்டி:

ரேக்லா போட்டி:

படத்தில் இடம்பெற்ற ரேக்லா போட்டிக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேனகா காந்திக்கு கால் நடைகள் மீது அதிக பாசம் என்று நினைக்கிறேன். எங்களுக்கு இல்லாத பாசமா உங்களுக்கு வந்துவிடப்போகிறது.

நீங்க யாரு நடுவுல..

நீங்க யாரு நடுவுல..

கடந்த வாரம் எனது உறவுக்காரப் பெண், ஒரு ஆட்டுக்குட்டிக்காக தனது உயிரையே மாய்த்துகொண்டாள். அப்படி கால்நடைகளுக்காக வாழ்பவர்கள் நாங்கள். அதனை எங்கள் உறவுகளாகவே பாவிக்கிறோம். எங்க ஆடு, மாடுகள பாத்துக்க எங்களுக்கு தெரியாதா. நடுவுல நீங்க யாரு.

போராடி இருப்பேன்:

போராடி இருப்பேன்:

ரேக்லா ரேஸ் இல்லை என்றால் படமே ரிலீசாகாது என நான் தயாரிப்பாளரிடம் உறுதியாக கூறிவிட்டேன். ஒருவேளை அந்த காட்சி நீக்கப்பட்டிருந்தால், நான் போராட்டம் நடத்தியிருப்பேன்" என அவர் ஆவேசமாகக் கூறினார்.

English summary
While speaking in the success meet function of Kadikutty siungam, director Pandiraj condemned the PETA and union minister Menaka Gandhi for his movie's Rekla race issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X