For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரைப்பட இயக்குநர் விசு பாஜகவில் இணைந்தார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திரைப்பட இயக்குநர் விசு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தார். "பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தை அளித்து வருகிறார்; தொடர்ந்தும் அவர் மாற்றத்தை தருவார்" என்ற நம்பிக்கையில் தாம் பாஜகவில் இணைந்ததாக விசு கூறியுள்ளார்.

'திருமதி ஒரு வெகுமதி' 'சம்சாரம் அது மின்சாரம்' உட்பட பல படங்களை நடித்து, இயக்கிய விசு, 'சன் டிவி' தொடங்கிய காலத்தில் இருந்து 'அரட்டை அரங்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் இவருக்கு 'அரட்டை அரங்கம் விசு' என்ற பட்டப் பெயர் கூட கிடைத்தது.

Director Vishu Joins BJP

பல நிகழ்ச்சிகள் காணாமல் போன போதும், பல நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மாற்றப்பட்டாலும், 'சன் டிவி'யில் அரட்டை அரங்கத்தை 5 ஆண்டுகளாக விசு நடத்தி வந்தார்.

கடந்த 2006-ல் ஜெயலலிதாவைச் சந்தித்து முறைப்படி அ.தி.மு.க.வில் தன்னை விசு இணைத்துக்கொண்டார். இதனால் சன்டிவியில் விசுவின் அரட்டை அரங்கம் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய விசு, சமுதாய நோக்கோடு விவாதங்களை ஊக்குவித்து, பல புதிய பேச்சாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உடல் நிலை காரணமாக பின்னர் படிப்படியாக அரட்டை அரங்கம் நடத்துவதை நிறுத்திக்கொண்டார் விசு. தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியதோடு சென்னையை விட்டு புறநகர் பகுதியிலும் குடியேறினார்.

இந்த நிலையில் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண முன்னிலையில் தம்மை பா.ஜ.க.வில் அவர் இணைத்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விசு, பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தை தந்து வருகிறார். மேலும் அவர் மாற்றத்தை தருவார் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார்.

பாஜகவில் நடிகர்கள் எஸ்.வி. சேகர், நெப்போலியன், இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director and Actor Vishu joined the Bharatiya Janatha Party (BJP) in Chennai on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X