For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப்பதிவு இயந்திரத்தில் டிஸ்லைக், கமெண்ட் ஆப்ஷன் வைக்கலாமே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சோழர் காலத்தில் குடவோலை முறையில் ஆரம்பித்த, நம் நாட்டு ஜனநாயக தேர்தல் இப்போது எவ்வளவோ மாற்றங்களை சந்தித்துவிட்டது.

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே பயன்படுத்த வாக்குப்பதிவு முறையில், நோட்டா என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலேயுள்ள எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிப்பதற்காக, வாக்கு பதிவு இயந்திரத்தின் கடைசி வரிசையில் நோட்டா வைக்கப்பட்டுள்ளது.

1 கோடி புது ரத்தம்

1 கோடி புது ரத்தம்

தமிழகத்தில் இப்போது சுமார் 1 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். இவர்களின் வாக்குகள்தான் வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகளுக்கு காரணமாக இருக்கப்போகிறது.

ஈர்க்க முயற்சி

ஈர்க்க முயற்சி

புதிய வாக்காளர்களை வாக்களிக்க இழுப்பதற்காகத்தான், தேர்தல் ஆணையம், அஸ்வின், ரெய்னா, கமல்ஹாசன் என பலரையும் தாஜா செய்து வருகிறது.

ஆன்லைன்

ஆன்லைன்

இது டிஜிட்டல் யுகம். இந்த இளம் வாக்காளர்கள் எல்லோரும், ஆன்லைன் மீடியாவில் செய்தி படித்து, அப்படியே வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து, பேஸ்புக்கில் லைக் வாங்கி, டிவிட்டரில் கருத்து கூறுபவர்கள்தான்.

மாற்றலாமே

மாற்றலாமே

இந்த வாக்காளர்களுக்கு வசதியாக சில மாற்றங்களை கொண்டுவந்தால் போதும்.. வாக்குப்பதிவு எண்ணிக்கை அபாரமாக கூடிவிடும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

டிஸ்லைக்

டிஸ்லைக்

உதாரணத்திற்கு, யூடியூப்பில் உள்ளதை போல டிஸ்லைக் பட்டனை வைத்தால், எந்தெந்த வேட்பாளர்கள் எல்லாம், மோசம் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கெல்லாம் டிஸ்லைக் தட்டிவிடலாம்.

கமெண்ட்

பேஸ்புக்கில் கமெண்ட் போட இடம் இருப்பதை போல, வாக்களிக்கும் இயந்திரத்தில் டைப் செய்ய வசதி செய்து கொடுத்தால், வேட்பாளர்களின், குற்றம் குறைகளை கண் கூசும் அளவுக்கு எழுதி தள்ளலாம். இளைஞர்களுக்கும், ஆன்லைனில் இருப்பதை போன்ற உணர்வை அது கொடுத்து, வாக்குப்பதிவு மையத்திற்கு வரிசையாக படையெடுக்க வைக்கும். இந்த கோரிக்கையை நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

English summary
Dislike and comment option is an option for Election commission to catch voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X