For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்!

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: உயர்மட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Dispute front of Chief minister Edappadi palanisami in the ADMK discussion meeting

இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழுவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

7 பேரைக் கொண்ட அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவால் அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜெயலலிதா இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாலாட்சி நெடுஞ்செழியன் இடத்தில் எம்பி வைத்திலிங்கத்தையும் சேர்க்க அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Dispute front of Chief minister Edappadi palanisami in the ADMK discussion meeting. This high level meeting there was a dispute over the addition of members in the council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X