For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெய்டு நடத்தி எங்க பிணத்தைதான் பணியவைக்க முடியும்- திவாகரன்

வருமான வரி சோதனை நடத்துவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது என்றுதிவாகரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா குடும்பத்தில் ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின!- வீடியோ

    சென்னை: வருமான வரி சோதனை மூலம் எங்களை பணியவைக்க முடியாது எங்கள் பிணத்தை தான் பணியவைக்க முடியும் என்று திவாகரன் கூறியுள்ளார்.

    கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்கள் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், கடைகள், பினாமிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    சோதனையில் ஆவணங்களை, கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா சகோதரர் திவாகரன் கல்லூரியில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மருமகன்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    விளக்கம் தர உத்தரவு

    விளக்கம் தர உத்தரவு

    மன்னார்குடியில் வீடு மற்றும் கல்லூரியில் கைப்பதற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்து நடைபெறும் விசாரணைக்காக திருச்சியில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்துள்ளனர்.

    ரெய்டு பற்றி திவாகரன்

    ரெய்டு பற்றி திவாகரன்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், இந்தியாவிலேயே மிக பெரிய சோதனை சசிகலா குடுமபத்தினரிடம் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

    அந்த சோதனை என்னவாச்சு?

    அந்த சோதனை என்னவாச்சு?

    ரெய்டில் ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறுகிறார்கள், ஆனால், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, அகில இந்திய மெடிக்கல் கவுன்சல் தலைவர் வீட்டில் நடைபெற்ற சோதனை என்னவானது?.

    பிணத்தைதான் பணியவைக்கமுடியும்

    பிணத்தைதான் பணியவைக்கமுடியும்

    வருமான வரி சோதனை மூலம் எங்களை பணியவைக்க முடியாது என்றும் எங்கள் பிணத்தை தான் பணியவைக்க முடியும் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

    ஓபிஎஸ், ஈபிஎஸ்

    ஓபிஎஸ், ஈபிஎஸ்

    ஆளுநர் ஆய்வு நடத்தியதன் மூலம் மாநிலத்தின் உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் விட்டு கொடுத்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

    சிடியை தேடியை அதிகாரிகள்

    சிடியை தேடியை அதிகாரிகள்

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த சிடி எங்கே என்றுதான் அதிகாரிகள் விசாரணையின் போது கேட்டனர். இந்த சோதனையே சிடியை தேடுவதற்காக நடத்தப்பட்ட சோதனைதான் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

    English summary
    Sasikala's brother Divakaran has blasted the IT raids held recently in his college and other premises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X