For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா"வை கைவிட்டு "அண்ணா"வுடன் சேர்ந்தார் சசியின் தம்பி திவாகரன்

சசிகலாவின் சகோதரன் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மன்னார்குடி: சசிகலாவின் சகோதரன் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை மன்னார்குடியில் தொடங்கினார்.

சசிகலா சிறைக்கு சென்றவுடன் திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து நடராஜன் அறிவுரையின்படி இருவரும் சகஜ நிலை திரும்பினர்.

எனினும் நடராஜன் மரணத்துக்கு பிறகு இருவருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உண்டானது. அண்மையில் இருவருக்கும் மோதல் பெரிதானது. திவாகரன் அம்மா முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியதும் வாழ்த்து கூறினார் தாய்மாமன் திவாகரன்.

ஆதரவை சோதித்தார்

ஆதரவை சோதித்தார்

ஆனால் இது கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. தினகரனுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. சசிகலா தனக்கு அக்காவே இல்லை என்று திவாகரன் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து அவர் அம்மா அணி என்ற கட்சியை தொடங்கி தனக்கு இருக்கும் ஆதரவை சோதித்தார்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

அப்போது தினகரன் அணியிலிருந்து நிறைய பேர் வருவர் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் நினைத்ததற்கு எதிர்மறையாகவே நடந்தது. இதனால் விரக்தி அடைந்த திவாகரன், தினகரனிடம் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்தை இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.

தொடக்கம்

தொடக்கம்

அதன் முயற்சியாக கட்சியில் திராவிடத்தை சேர்த்து புதிய கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை மன்னார்குடியில் தொடங்கினார்.

பச்சை நட்சத்திரம்

பச்சை நட்சத்திரம்

கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில் கருப்பு, சிகப்பு, வெள்ளை நிறக் கொடியின் நடுவே பச்சை நட்சத்திரம் கொண்ட கொடியை அறிமுகப்படுத்தினார்.

English summary
Diwakaran started new party called Anna Dravidar Kazhagam. He also introduced his party's flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X