For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் களை கட்டும் தீபாவளி பண்டிகை... இனிப்பு விற்பனை விறுவிறு...

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அடுத்து இனிப்புகளின் விற்பனை விறுவிறுவென சூடு பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களை கட்டி வரும் நிலையில் இனிப்புகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முதலிடம் பிடிப்பது பட்டாசுதான். அடுத்ததாக நினைவுக்கு வருவது பலகாரங்கள்தான். அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு பலகாரத்தை பலர் ருசித்து பார்ப்பதுண்டு. முன்பெல்லாம் குடும்ப தலைவிகள் இரவு முழுவதும் கண்விழித்து முந்திரிகொத்து, அதிரசம், முறுக்கு, போண்டா, வடை போன்றவைகளை விதவிதமாத சமைத்து போடுவர்.

Diwali festival: Sweet sales increases in Nellai

ஆனால் காலம் செல்ல செல்ல பலர் போண்டா, வடை தவிர மற்ற பண்டங்களை செய்ய நேரம் இல்லை. இதனால் இதர பலகாரங்கள் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

நெல்லை பகுதியில் இருக்கும் கடைகளில் அச்சு முறுக்கி 10க்கு ரூ,20ம், சீனியப்பம் ரூ.3, ஓரு கிலோ தேன்குழால் ரூ.100-ம், தனி லட்டு ரூ.4-க்கும் வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப விற்கப்படுகிறது.

இந்த பலகாரங்களை தீபாவளி தினத்தன்று காலையில் மொத்தமாக வாங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாளை கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், பலர் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இருப்பினும் இவ்வாண்டு பலகாரங்கள் கொள்முதல் குறைவுதான் என்று தெரிவித்தார்.

English summary
Diwali is going to celebrate in Tamilnadu on Oct 18. Sales of sweets and snacks increases in Nellai District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X