For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: வீரமணி, ஸ்டாலின் பங்கேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர்மாணி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

DK protest against Centre's new education policy

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகம், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடஇயக்கத் தமிழர் பேரவை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, கிறித்துவ நல்லெண்ண இயக்கம், இந்திய சமூகநீதி இயக்கம், தமிழ்நாடு பெற்றோர் மாணவர் சங்கம், அ.இ. பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம் மற்றும் பல்வேறு கல்வி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஆபத்தான புதிய கல்வி கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது. புதிய கல்விக் கொள்கையால் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பாதிக்கும் என்றார்.

English summary
DK held protest against the Centre's New Education Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X