For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்ய்யயோ பாவம்.. எப்படி 'கன்பியூஸ்' ஆகிட்டாரு பாருங்க இவரு...!

|

திண்டுக்கல்: கும்மிருட்டு ரூமில் உங்களை அடைத்து வைத்து திடீர்னு ஆயிரக்கணக்கான சிஎப்எல் லைட்டுகளை பளீரென்று எரிய வி்ட்டால் உங்களுக்கு எப்படி குபீரென்று கண் கூசுமோ.. அப்படி ஆகி விட்டது திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி கதை.

முதல் முறையாக தேர்தலில் களம் கண்டுள்ள கிருஷ்ணமூர்த்தி திடீரென ஏகப்பட்ட செய்தியாளர்கள் வந்து உட்கார்ந்து கேள்விகரள் கேட்டதால் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் உளறியபடி ஒப்பேத்திய களேபரம் நடந்தேறியது.

தேமுதிக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்துவதற்கான கூட்டம் அது. செய்தியாளர்கள் நிறையப் பேர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்துகக குழம்பிப் போன கிருஷ்ணமூர்த்தி மைக்கை எடுத்துப் பேசுகையில், உளறத் தொடங்கினார்.

அவர் பாட்டுக்கு மோடி நரேந்திரன் பிரதமராக வரவேண்டும் என்று ஆரம்பித்தபோது அவரை விட அதிகம் குழம்பியவர்கள் செய்தியாளர்கள்தான் .. விட்டாரா அத்தோடு. தொடர்ந்து, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை... ம்... தேசிய முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்... என்று உய்யா உய்யா வென்று உளறினார்.

அட அது பரவாயில்லைங்க.. அடுத்து அவர் சொன்னதுதான் செம்ம காமெடி... நானும் திண்டுக்கல்தான்... பக்கத்துல இருக்கும் விருதுநகர்தான் எனக்கு சொந்த ஊரு... என்று அவர் சொல்லி முடித்தபோது கொல் எனறு சிரிக்காத குறையாக செய்தியாளர்கள் சிலிர்த்துக கொண்டனர்.

திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல எப்பய்யா விருதுநகரை நிப்பாட்டி வச்சீங்க.. சொல்லவே இல்லை...!!

English summary
DMDK candiate's bluff in press meet created laughter wave in Dindigul recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X