For Daily Alerts
Just In
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக
அரவக்குறிச்சி உட்பட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக, பாமக, பாஜக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரகசிய ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
தேமுதிக வேட்பாளர்கள் விவரம்:
அரவக்குறிச்சி- முத்து
தஞ்சாவூர்- அப்துல்லா சேட்
திருப்பரங்குன்றம்- தனபாண்டியன்
Comments
tamilnadu assembly election 2016 aravakurichi thanjavur nomination papers jayalalitha தமிழக சட்டசபை தேர்தல் 2016 தஞ்சாவூர் தேமுதிக வேட்பாளர்கள்
English summary
DMDK today announced the candidates for Aravakurichi, Thanjavur, Thiruparankundram assembly constituencies.