பாட்டு, சண்டை... கோயம்பேட்டில் பொங்கல் வைத்து விழா கொண்டாடிய தேமுதிக
சென்னை: தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று ஆடல், பாடல்கள், சண்டைக் காட்சிகளுடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த விழாவில் பெரும் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தேமுதிக சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் அவரது குழுவினருடைய இசை நிகழ்ச்சி, சினிமா சண்டை பயிற்சியாளர் புஷ்பராஜ் குழுவினரின் சண்டை காட்சிகளும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கழக கலை இலக்கிய அணியினரின் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இ
நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிரேமலதா விஜயகாந்த் கழக மகளிர் அணியினருடன் பொங்கல் வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலைய செயலாளர்.ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் பி. முருகேசன், ஆர். உமாநாத், என். ஜாகீர் உசேன், கழக இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications