For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, தென்காசியில் டெபாசிட் இழந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக வேட்பாளர்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை, தென்காசி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி பிற கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் உள்பட 27 பேர் போட்டியிட்டனர்.

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 99 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 40 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார். தேமுதிக வேட்பாளர் சிவனனைந்த பெருமாள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 370 வாக்குகள் பெற்று 3 இடம் பிடித்தார். காங்கிரசுக்கு 4வது இடம் கிடைத்தது.

நெல்லை தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 647 வாக்குகள் பதிவாகி இருந்தது. வேட்பாளர் டெபாசிட் பணத்தை திரும்ப பெற பதிவான வாக்குகளில் 4ல் ஒரு பங்கு வாக்கினைப் பெற வேண்டும். இதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 441 ஓட்டுகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைக்க முடியும்.

இதனால் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக,காங் உள்பட பலர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

1 லட்சத்து 27 ஆயிரத்து 340 வாக்குகள் பற்ற தேமுதிக வேட்பாளர் 3வது இடம் பெற்ற போதிலும் டெபாசிட் தொகையை தக்க வைக்க முடியாமல் போனது.

இது போல் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், இந்திய கம்யூ வேட்பாளர் லிங்கம் உள்ளிட்ட 15 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

English summary
AIADMK candidates Prabhakaran ( Tirunelveli) won the loksabha election the other candidates including Congress CPI and independents lost their deposits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X