For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் நின்றிருந்தாலும் படுகேவலமாக டெபாசிட் பறிபோயிருக்கும் 'மக்கழே'!

திருப்பரங்குன்றத்தில் பாஜகவிடம் தோற்று 4-வது இடத்துக்கு போனது தேமுதிக.

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையே தேமுதிகவுக்குதான் சரியாக பொருந்துகிறது.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை விட குறைவான வாக்குகளைத்தான் தேமுதிக வேட்பாளரால் பெற முடிந்திருக்கிறது.

திமுக, அதிமுகவுக்கு மாற்று என களமிறங்கியது தேமுதிக... தொடக்கத்தில் தனித்துப் போட்டியிட்டு 2 கட்சிகளுக்கும் ஒரு சவாலான கட்சி என தோற்றத்தை வெளிப்படுத்தியது.

அதளபாதாளம்...

அதளபாதாளம்...

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பின்னர் அதில் இருந்து வெளியேறியது தேமுதிக. அதேபோல் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போனது. கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் அணி சேர்ந்தது. இப்படி அணி மாறி மாறி ஓடியதால் அக்கட்சிக்கென இருந்த தனித்துவமான வாக்கு வங்கியும் அதளபாதாளத்துக்கு போனது.

விஜயகாந்த் போட்டியிடனும்

விஜயகாந்த் போட்டியிடனும்

சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஞானோதயம் பெற்றவராக பேசிய விஜயகாந்த், தனித்தே போட்டியிடுகிறோம் என அறிவித்தார். அதுவும் திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் நிற்க வேண்டும் என்றெல்லாம் தேமுதிகவினர் அடம்பிடித்தனர்.

படுமோசமான தோல்வி

படுமோசமான தோல்வி

போன தேர்தலில் கொஞ்சம் கவுரவமான வாக்குகளைப் பெற்று உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டை பறிகொடுத்தார் விஜயகாந்த். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவர் நின்றிருந்தால் பாஜகவிடம் தோற்க வேண்டிய நிலைதான் வந்திருக்கும் என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

4-வது இடத்தில்...

4-வது இடத்தில்...

திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடக்கத்தில் 3-வது இடத்தில் தேமுதிக இருந்தது. ஆனால் போக போக பாஜக முன்னிலை பெற்று 3-வது இடத்துக்குப் போனது. தேமுதிக 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

இனி சூன்யமான எதிர்காலம்?

திருப்பரங்குன்றம் தொகுதி 12-வது சுற்று முடிவு நிலவரம்:

திருப்பரங்குன்றம் தொகுதி 12-வது சுற்று முடிவு நிலவரம்:

பாஜக - 3835

தேமுதிக- 2462

English summary
According to Thiruparankundram By Poll results BJP defeated DMDK as 3rd Place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X