மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ’கேப்டன்’ தமிழகம் திரும்பினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறும் விஜயகாந்த்.. பச்சை நிற உடையில் பாவமாக போஸ்- வீடியோ

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இதற்காக சிங்கபூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

DMDK General secretary Vijayakanth returns to home from Singapore

அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 28ஆம் தேதி சென்றார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருந்தார். இந்தப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். நடைபெறவுள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK General secretary Vijayakanth returns to home from Singapore. Vijayakanth had gone to Singapore for casual medical check up.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற