For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனைவியுடன் மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்!- வீடியோ

    திருப்பூர்: ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தாத அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார்.

    ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற காமராஜர் காலத்திலிருந்து மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஆனைமலை அணையிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து பொள்ளாச்சியில் உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது ஆகும்.

    DMDK General secretary Vijayakanth travels in bullock cart

    இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் பயனடைவர். இந்த திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர்.

    குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் உதவிடும் இந்த திட்டத்தை செயல்படுத்தாத மத்திய -மாநில அரசுகளை கண்டித்து உடுமலையில் இன்று தேமுதிக ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகிறது.

    இதற்காக ஏரிப்பாளையத்திலிருந்து உடுமலைக்கு மாட்டு வண்டி மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பயணம் மேற்கொண்டுள்ளார். உடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

    English summary
    DMDK General Secretary Vijayakanth travels in Bullock cart to conduct protest against Central and state governments who failed to implement Aanaimalai Nallar project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X