For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல்வி எதிரொலி: தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட அலுவலகர்கள்

By Mayura Akilan
|

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தேமுதிகவினர் சோர்வைடைந்துள்ளனர்.

கட்சித் தொண்டர்கள் யாரும் எட்டிப் பார்க்காத காரணத்தினர்.சென்னையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

DMDK headquarter in Chennai wears a deserted look

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டது.

சூறாவளி பிரசாரம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.

வெற்றிக்கனி கிட்டவில்லை

தேர்தலில் தே.மு.தி.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கட்சி அலுவலகம் வெறிச்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகம் இன்று வெறிச் சோடியது. கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை.

பூட்டு போட்ட அலுவலகர்கள்

தொண்டர்களும் வரவில்லை, ஊடகத்தினரும் வரவில்லை என்பதால் கட்சி அலுவலகத்தின் ‘கேட்' பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் களை இழந்து காணப்படுகிறது.

பொள்ளாச்சியில் ஓய்வு

தேர்தல் முடிவு பற்றி முன்கூட்டியே தெரிந்துபோனதாலோ என்னவோ தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மகன் சினிமா படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் முகாமிட்டு மகன் நடிக்கும் படப்பிடிப்பை ரசித்துக்கொண்டிருக்கிறார்.

English summary
DMDK headquarters in Koyambedu wore a deserted look as news of party candidates trailing in most constituencies in Tamil Nadu started to trickle in on Friday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X