For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரணஅடியால் மயான சூழ்நிலைக்கு மாறிய தேமுதிக தலைமை அலுவலகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு மரணஅடி கிடைத்துள்ளதால் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் யாரும் இன்றி மயான அமைதி நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெற்றது. இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

DMDK headquarters desert look

232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக சட்டசபைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே உள்ளது.

3 தொகுதிகளில் மட்டுமே தேமுதிக முன்னணியில் உள்ளது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பல தொகுதிகளில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

English summary
DMDK headquarters in Koyambedu wears a deserted as news of party candidates lose in most constituencies in Tamil Nadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X