For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறக்க முடியாத விஜயகாந்தின் அந்த யோகா தினம்!

2015ஆம் ஆண்டு விஜயகாந்த் தனது கட்சிக்காரர்களுடன் பங்கேற்ற யோகா தின வீடியோ இன்றும் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயகாந்தின் அந்த யோகா தினம்!-வீடியோ

    சென்னை: 2015ஆம் ஆண்டு விஜயகாந்த் தனது கட்சிக்காரர்களுடன் பங்கேற்ற யோகா தின வீடியோ இன்றும் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு யோகா தினத்தையொட்டி தனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் யோகாசனம் செய்தார்.

    மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மற்றும் கட்சியினருடன் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து யோகாசனங்களை செய்தார் விஜயகாந்த்.

    அசத்திய விஜயகாந்த்

    அசத்திய விஜயகாந்த்

    பத்மாசனம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை உட்கார்ந்தபடியே செய்து அசத்தினார் கேப்டன். அவ்வப்போது சில யோகாக்களை எப்படி செய்வது என குழப்பமும் அடைந்தார்.

    வைரலான யோகா

    வைரலான யோகா

    சில நேரங்களில் அவரது மனைவி பிரேமலதா இப்படி செய்ய வேண்டும் என அவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார். விஜயகாந்த் தனது கட்சியினருடன் செய்த யோகாசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதிகளவு ட்ரோல்

    அதிகளவு ட்ரோல்

    பலரும் அந்த வீடியோக்களை பகிர்ந்தனர். அவரது யோகாசன வீடியோ அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டது.

    மவுசு குறையவில்லை

    மவுசு குறையவில்லை

    அந்த வீடியோ வெளியாகி மூன்றாண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆனால் இன்றளவும் அதற்கான மவுசு குறையவில்லை.

    தீனிபோடும் வீடியோ

    தீனிபோடும் வீடியோ

    ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் வரும் போதெல்லாம் அந்த வீடியோ வைரலாகி விடுகிறது. இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் வீடியோவாக உள்ளது கேப்டன் தலைமையில் தேமுதிகவினர் கொண்டாடிய யோகா தினம்.

    English summary
    DMDK leader Vijayakanth's yoga day celebration video became viral on social media. Vijayakanth celebrated yoga day on 2015 June 22.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X