For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க ஆட்சிக்கு வந்தது "கேப்டன்" போட்ட பிச்சை... வேடலில் வைத்து அதிமுகவை வறுத்த தேமுதிகவினர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் பேச விடாமல் தடுப்பது நியாயமா? எதிர்த்து பேசினால் சஸ்பெண்ட்
செய்வதா? நீங்க ஆட்சிக்கு வந்தது எங்க கேப்டன் போட்ட பிச்சை என்று காஞ்சிபுரம்
மாநாட்டில் ஆளும் அதிமுகவை போட்டு வறுத்தெடுத்தனர் தேமுதிகவினர். ஆனால் திமுகவை
யாரும் விமர்சனம் செய்யவில்லை.

காஞ்சி குலுங்க குலுங்க தேமுதிகவின் அரசியல் மாநாடு காஞ்சிபுரம் அருகே வேடலில் நடைபெற்றது. விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேசும் முன்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பேசினர். பேசினார்கள் என்பதை விட ஆளும் அதிமுகவை வறுத்தெடுத்தனர்.

DMDK leaders hail Vijayakanth

மாநாடு துளிகள்

  • மாநாட்டில் பேசிய அனைவரும் விஜயகாந்தை அண்ணன் என்றும் பிரேமலதாவை அண்ணியார் என்றும் அழைத்தனர்
  • துணைச்செயலாளர் ஜாகிர் ஹூசைன் பிரேமலதாவை மதினியார் அவர்களே என்று அழைத்தார்.
  • காக்கும் கடவுள், தென்னிந்திய ஜான்சி ராணி என்று பிரேமலதாவை அழைத்து உற்சாகமூட்டினர்.
  • நாளைய தமிழக முதல்வரே என்று அனைவரும் விஜயகாந்தை அழைத்தனர்
  • மேடையில் பேசிய அனைவரும் ஜெயலலிதாவை ஒருமையில் பேசினார்கள்
  • உனக்கு வாழ்வளித்தது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்... உன்னை வீழ்த்தப்போவது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
  • அம்மாவுக்கு தண்ணியில கண்டம்... டாஸ்மாக்கும், வெள்ளமும் அம்மாவுக்கு கண்டம்
  • அதிமுகவை வறுத்தெடுத்தனர் தேமுதிகவினர்
  • அதிமுக ஆட்சிக்கு வந்தது கேப்டன் போட்ட பிச்சை... ஆணவமாக நடப்பதா?
  • வீட்டிற்குள் இருந்த பெண்களை அரசியலுக்கு கொண்டு வந்தது கேப்டன்
  • அரசியலில் உள்ள ஆண்களை அடிமையாக்கி அசிங்கப்படுத்தியது ஜெயலலிதா
  • மேடையில் பேசிய யாரும் திமுக விமர்சனம் செய்யவில்லை
  • மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சனம் செய்யவில்லை
  • மாநாடு மேடைக்கு சுதீஷ், பிரேமலதா வரும் போது உற்சாக பாடல் போட்டு வரவேற்பு கொடுத்தனர்.
  • நடிகர் ராஜேந்திர பிரசாத் வீரா வேஷமாக பேசினார்... அவ்வப்போது த்தூ... த்தூ என்று துப்பினார்.
English summary
DMDK second rung leaders hailed Vijayakanth and slammed ADMK ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X