For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிகாந்த் கட்சி துவங்க மாட்டார்.. சொல்வது யார் தெரியுமா?

ரஜினிகாந்த் கட்சி துவங்கமாட்டார், தேமுதிக ஆட்சி அமைக்கும் என தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் அதிரடியாக பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கமாட்டார் என்றும் வருகிற தேர்தலில் தேமுதிக தான் ஆட்சியமைக்கும் என்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் அதிரடியாக கூறியுள்ளார்.

திருப்பூரில் தேமுதிகவின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்துக்கு முன்பாக சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழக அரசு முழுவதுமாக பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசு ஒரு செயல்படாத நிலையிலேயே உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. என்று குற்றம் சாட்டினார்.

DMDK’s deputy secretary Sutheesh says, Rajinikanth will not start political party,

தொடர்ந்து பேசிய சுதீஷ், "லாரி ஸ்டிரைக்கால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிகை விடுத்தார். மேலும், வருகிற செப்டம்பர் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவித்தார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சுதீஷ் கூறுகையில், "சென்னை மாற்றுத்திறநாளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

DMDK’s deputy secretary Sutheesh says, Rajinikanth will not start political party,

இதைத்தொடர்ந்து, தேமுதிகவின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சுதீஷ், "திமுகவின் செயல் தலைவர் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் வருங்கால தலைவராகவும் , முதல்வராகவும் நினைத்து வருகிறார். அவரால் எப்போதும் கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் ஆக முடியாது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கமாட்டார். வருகின்ற தேர்தலில் தேமுதிக தான் ஆட்சியமைக்கும் என்று அதிரடியாகப் பேசினார்.

English summary
DMDK’s deputy secretary Sutheesh says, Rajinikanth will not start political party, DMDK will form government coming up election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X