For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மாநாட்டால் டாஸ்மாக்குக்கு கிடைத்த வசூல் ரூ. 10 கோடி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் திமுக மாநாடு நடந்த இரண்டு நாட்களில் திருச்சியில் ரூ 10 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாம்.

திருச்சி மாநாட்டுக்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 12.5 லட்சம் குவார்ட்டர் மதுவை வாங்கி வாயில் இறக்கியுள்ளனராம்.

வழக்கமாக அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடந்தால் மது விற்பனைதான் முதலில் களை கட்டும். சமீபத்தில் நடந்த தேமுதிக, பாஜக மாநாடுகளின்போதும் கூட இப்படித்தான் மது விற்பனை அபாரமாக இருந்தது.

திமுகவினர் மட்டும் சும்மா இருப்பார்களா.. வாங்கிக் குடித்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

பிராட்டியூரில்

பிராட்டியூரில்

திருச்சியில், திண்டுக்கல் சாலையில் உள்ள பிராட்டியூரில் 10வது திமுக மாநில மாநாடு 2 நாட்களுக்கு நடந்தது. இந்த இரண்டு நாட்களும் மது ஆறாக ஓடியுள்ளது.

கடைகளில் டபுள் கரை வேட்டிகளின் கூட்டம்

கடைகளில் டபுள் கரை வேட்டிகளின் கூட்டம்

திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கருப்பு சிவப்பு கரை வேட்டி கூட்டம் களேபரமாக காணப்பட்டதாம்.

பல மடங்கு வியாபாரம்

பல மடங்கு வியாபாரம்

திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 213 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 1 கோடி வரை விற்பனையாகும். இதுவே சனி ஞாயிறாக இருந்தால் கூடுதலாக ரூ. 50 லட்சம் வரை விற்பனை இருக்குமாம். ஆனால் திமுக மாநாட்டையொட்டி பல மடங்கு வருவாய் கிடைத்துள்ளதாம் இந்தக் கடைகளுக்கு.

அம்மா கையைப் பலப்படுத்திய உடன்பிறப்புகள்

அம்மா கையைப் பலப்படுத்திய உடன்பிறப்புகள்

அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் திமுகவினர் கூட்டம் அலைமோதியபடி இருந்ததாம். ரூ. 10 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை முதலே...

வெள்ளிக்கிழமை முதலே...

வெள்ளிக்கிழமை முதலே மது விற்பனை களை கட்டி விட்டதாம். அன்றைய தினம் ரூ. ஒன்றை கோடி அளவுக்கு மது விற்றுள்ளது. அடுத்த நாள் விற்பனை சற்றே எகிறி ரூ. 3.5 கோடிக்கு விற்றுள்ளது. நேற்றுதான் உச்சகட்டமாக ரூ. 5 கோடிக்கு வாங்கிக் குடித்துள்ளனர். மொத்தமாக ரூ. 10 கோடியை அரசுக்குக் கொடுத்துள்ளனர் திமுகவினர்.

பட்.. அரசின் டார்கெட் ரூ. 15 கோடியாம்

பட்.. அரசின் டார்கெட் ரூ. 15 கோடியாம்

ஆனால் அரசுத் தரப்பிலோ ரூ. 15 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டிருந்தனராம். திமுகவினர் குடிக்க வசதியாக, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மது வகைகளை வாங்கி ஸ்டாக் வேறு வைத்து விற்றுள்ளனர். குடிக்க வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லி விடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்....

English summary
Rs 10 cr worth liquor was sold out in Trichy, thanks to DMK's state conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X