For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம்... கோவையில் திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை பீளமேட்டில் நடந்த போராட்டத்தின் போது திமுக தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை பீளமேட்டில் நடந்த போராட்டத்தின் போது திமுக தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்தால் தமிழக போராட்டக்களமாகியுள்ளது. மற்றொருபுறம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

DMK cadres tried to set abalze themselves at Coimbatore Peelamedu protest saved last minute

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை பீளமேட்டில் திமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக தொண்டர்கள் 2 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முருகேசன், சிங்கை சதாசிவம் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைக்க முயன்றபோது அவர்களை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

English summary
DMK cadres tried to set abalze themselves at Coimbatore Peelamedu protest saved last minute, they tried to set ablaze themselves for the implementation of cauvery management board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X