For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல் திமுகவும் களமிறங்கியது... செப். 19 முதல் விருப்ப மனு தரலாம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுகவில் வரும் 19-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சிப் பொதுச்செயலர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசு தயராகி வருகிறது.

DMK calls for applications from aspirants for local body elections

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்றும் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இது 22-ந் தேதிவரை பெறப்படும் என முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தற்போது திமுகவும் விருப்ப மனுக்களை பெறுவது குறித்து அறிவித்துள்ளது. திமுக பொதுச்செயலர் இன்று அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என கூறியுள்ளார்.

English summary
DMK general secretary K Anbazhagan today called for applications from party aspirants who wish to contest the forthcoming local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X