For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் நாளே குழப்பம்... திமுக நேர்காணல் தேதி நீட்டிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: திட்டமிட்டபடி முதல்நாள் நேர்காணல் முடிவடையாததால், திமுக நேர்காணல் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Dmk candidate interview

அந்தவகையில், விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் செய்யும் பணியை நேற்று தொடங்கியது திமுக. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களை திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலத்தில் உள்ள கழக அலுவலகத்தில் சந்தித்து நேர்காணல் செய்தார். அதில் மு.க.ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கன்னியாகுமரி மற்றும் நெல்லையை மட்டுமே முடிக்க முடிந்தது. மீதமிருந்த மாவட்டங்களுக்கு இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.

இதனால் திமுகவில் நேர்காணல் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கலைஞர் நேர்காணல் வாயிலாகச் சந்திப்பது 22.2.2016 அன்று தொடங்கிய வகையில், அன்றைய தினம் 7 மாட்டங்களில் விருப்ப மனு தாக்கல்செய்தவர்களைச் சந்தப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இரவு 9 மணி வரையில் சந்தித்தித்த போதிலும் 2 மாவட்டங்களை மட்டும் நிறைவு செய்ய முடிந்தது. மற்ற ஐந்து மாவட்டங்களில் விருப்ப மனு தாக்கல் செய்யாதவர்களும் அண்ணா அறிவாலயத்தில் காத்திருக்க நேர்ந்தது. எனவே அனைவரின் சிரமங்களைக் குறைப்பதற்காக நேர்காணல் நாட்களை சற்று மாற்றி அறிவிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பின் படி, தேதி வாரியாக நேர்காணலில் இடம் பெறும் மாவட்டங்களின் விபரம் பின்வருமாறு:

பிப்ரவரி 23 : தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி
பிப்ரவரி 24: திண்டுக்கல், சிவகங்கை, மதுரை புறநகர்
பிப்ரவரி 25: நீலகிரி, ஈரோடு, கோவை, கோவை மாநகர்
பிப்ரவரி 26: சேலம், நாமக்கல், கரூர்
பிப்ரவரி 27: திருப்பூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்
மார்ச் 2: திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை
மார்ச் 3: தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம்
மார்ச் 4: திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி
மார்ச் 5: வேலூர், காஞ்சிபுரம்
மார்ச் 7: திருவள்ளூர், புதுவை, காரைக்கால், சென்னை

English summary
The DMK has extended its candidate interview dates for Tamilnadu assembly election till march 7th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X